தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின் அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக, சிங்கப்பூர் தூதரக உயர் ஆணையர், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜயை வாழ்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழக முதல்வராக நீங்கள் ராகுல் காந்தி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகிறேன். தமிழக முதல்வராக நீங்கள் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதுடன் உங்கள் மாநிலத்தை வளர்ச்சியில் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வீர்கள் என்று ஆணித்தரமாக நம்பிக்கை பூண்டிருக்கிறேன். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
Summary
Vijay Will Lead Tamil Nadu to the Pinnacle of Development: Revanth Reddy Extends Best Wishes!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிட்லரிடம் உத்வேகம் பெற்று திட்டத்திற்குப் பெயர்: ரேவந்த் ரெட்டி மீது எழும் விமர்சனங்கள்!

தமிழக மக்களின் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவார்: ராகுல் காந்தி

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




