தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஒரு வாக்கினால் தோல்வி: பெரியகருப்பன் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

Seenivasa Sethupathi / K.R. Periyakaruppan

சீனிவாச சேதுபதி / கே.ஆர். பெரியகருப்பன் - படம் - தேர்தல் ஆணையம்

Published On :

சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதையடுத்து தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை கோரி பெரியகருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஒரு வாக்கில் தோல்வியடைந்த பெரியகருப்பன், தனது சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் அதனால் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாகவும் புகார் அளித்தார்.

அதேநேரத்தில் தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் கூற, தொகுதி தேர்தல் அதிகாரியே தபால் வாக்குகள் மாறியுள்ளதாகக் கூறியதாக பெரிய கருப்பன் தரப்பும் வாதத்தை முன்வைத்துள்ளது.

தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பினால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

Verdict in Periyakaruppan Case Adjourned by madras hc

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.