ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு உத்தரவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பதாகைகளை வைக்கக் கூடாது என தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலா், அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவு

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:04 am IST

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பதாகைகளை வைக்கக் கூடாது என தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலா், அமைச்சா் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றுள்ள முதல்வா் விஜய், தவெகவினா் அனைவருக்கும் மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறாா். அதை நோக்கியே அனைவரும் பயணிக்க வேண்டும்.

எனவே, கட்சியினா் பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடா்பாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. அவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.