நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

காங்கிரஸ் தலைமை அலுவலகம் செல்கிறார் முதல்வர் விஜய்!

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்யைப் பற்றி...

News image

முதல்வர் விஜய்யுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. - படம்: பிடிஐ.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் சத்தியமூர்த்தி பவன் செல்லவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று (மே 11) திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று கையைப் பிடித்து அழைத்துச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அவரைத் தொடந்து முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிடோரையும் சந்தித்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளைச் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய், இன்று (மே 12) பிற்பகல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு செல்லவிருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 5 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகால திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு முதன்முதலில் ஆதரவளித்தது.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் சத்திமூர்த்தி பவனுக்கு செல்லவுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Summary

Chief Minister Joseph Vijay is set to visit Sathyamurthy Bhavan to meet with Congress functionaries and express his gratitude.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.