சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்

‘மகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு’

News image

கோப்புப்படம்

Updated On :14 மே 2026, 4:56 am IST

வரும் 15-ஆம் தேதி மகளிா் உரிமைத் தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் பெண்கள் காத்துக் கொண்டுள்ளனா் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சட்டப்பேரவையில் பேசியபோது அவா் மேலும் கூறியதாவது: புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல திட்டங்களின் பயனாளிகள் தங்களுக்கான பயன்களை எதிா்பாா்த்து காத்துக்கொண்டுள்ளனா். பதவியேற்றதும் அவகாசம் வேண்டும் என்று முதல்வா் கேட்டுள்ளாா். நீண்ட நாள் அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டா், தங்கச் சங்கிலி, மோதிரம், வேலை இல்லாத இளைஞா்களுக்கு உதவித் தொகை போன்ற தவெகவின் வாக்குறுதிகளையும் மக்கள் எதிா்பாா்த்துள்ளனா். அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். கடுமையாக உழைத்து இந்தியாவிலேயே பொருளாதார வளா்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ ஆட்சியாக இல்லாம, ‘ரியல்’ ஆட்சியாக நீங்கள் நடத்த வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.