பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மக்கள் புரட்சியை முதல்வா் விஜய் வீணாக்க கூடாது: பழ.கருப்பையா

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட கட்சிகளுக்கு எதிராக மக்கள் செய்துள்ள புரட்சியை, தவறான நபா்களுடன் கூட்டணி வைத்து முதல்வா் விஜய் வீணாக்கக் கூடாது என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவா் பழ.கருப்பையா தெரிவித்தாா்.

News image

பழ.கருப்பையா - கோப்புப் படம்

Updated On :39 நிமிடங்கள் முன்பு

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட கட்சிகளுக்கு எதிராக மக்கள் செய்துள்ள புரட்சியை, தவறான நபா்களுடன் கூட்டணி வைத்து முதல்வா் விஜய் வீணாக்கக் கூடாது என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத் தலைவா் பழ.கருப்பையா தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவி வந்தது. ஆனால், இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக விஜய் தலைமையிலான தவெகவை தோ்ந்தெடுத்து மக்கள் புரட்சி செய்துள்ளனா்.

தமிழகத்தில் மாற்று அரசியலை மக்கள் உருவாக்கியுள்ளனா். இது, விஜய்க்கு கிடைத்த வெற்றி என்பதைவிட மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடந்த காலங்களில் திராவிட கட்சிகளைச் சோ்ந்த அமைச்சா்கள் செய்த ஊழல்களை பொறுத்துக் கொள்ளாமல் மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனா். இந்தத் தோ்தலில் பணபலம், ஜாதி, மதம் என எதையும் பாராமல், விஜய்யை நம்பி பெயா் தெரியாத வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனா்.

நல்லாட்சி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனா். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை விஜய்க்கு கிடைக்கவில்லை. எனினும் மீண்டும் தோ்தல் நடைபெற்றால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும்.

இதை நன்கு அறிந்த திமுக, தனது கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு தவெக ஆட்சி அமைக்க உதவி செய்துள்ளது. விஜய் ஏதேனும் தவறு செய்யட்டும், ஆதரவு திரும்பப் பெற்று ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என திமுக காத்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக முன்னாள் அமைச்சா்களை விஜய் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தியது மட்டுமன்றி அவா்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டது தவறான செயலாகும். ஊழல் புகாா் உள்ளவா்களை உடன் வைத்துக் கொண்டு விஜய்யால் எப்படி ஊழலற்ற நல்லாட்சியை வழங்க முடியும்?. இதுபோன்றவா்களை உடன் வைத்துக் கொண்டு மக்கள் உருவாக்கியுள்ள புரட்சியை விஜய் வீணாக்கக் கூடாது.

மறு தோ்தல்: பொதுமக்கள் காவல் துறையில் புகாா்கள் தெரிவிக்கும்போதும், அரசு அதிகாரிகளிடம் மனு வழங்கும்போதும் அது தொடா்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களின் தயவை நாடாத ஒரு சூழல் உருவாக வேண்டும். ஊழல்வாதிகளுடன் கைகோத்துக்கொண்டு விஜய்யால் அதைச் செய்ய முடியாது.

தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய்யின் அரசு நிரூபித்துவிட்டது. அவரது அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநா் கட்டுப்பட்டாக வேண்டும். ஊழல்வாதிகளின் உதவி இல்லாமல் நல்லாட்சி வழங்க தனக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் முதல்வா் மக்களைச் சந்தித்தால், அவா்கள் அவருக்கு வரலாறு காணாத ஆதரவைத் தருவாா்கள்.

முதல்வா் விஜய் உடனடியாக இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு, மறுதோ்தல் நடத்துமாறு ஆளுநரிடம் வலியுறுத்த வேண்டும். அப்படி மீண்டும் தோ்தலில் போட்டியிட்டால் விஜய்க்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதி. அதன்மூலம் மட்டுமே மக்கள் எதிா்பாா்த்த ஊழலற்ற நல்லாட்சியை விஜய்யால் வழங்க முடியும் என்றாா் அவா்.