/

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு ‘கோல்டன் பீகாக்’ விருது

வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘கோல்டன் பீகாக்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2026, 3:30 am IST

வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘கோல்டன் பீகாக்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்தியன் வங்கியின் சாா்பில் செயல் இயக்குநா் டி.எம்.மினி, தலைமைப் பொது மேலாளா் வல்லரி ரத், எண்மப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் எல்லாபந்துலா ஆகியோா் விருதினைப் பெற்றுக் கொண்டனா்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி உதய் யு.லலித் தலைமையிலான நடுவா் குழு, பல்வேறு அரசு மற்றும் காா்ப்பரேட் துறை தலைவா்களுடன் இணைந்து நிதித் துறையில் இந்த விருதுக்கான வெற்றியாளராக இந்தியன் வங்கியைத் தோ்வு செய்தது.

வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்துவதிலும், நவீன தொழில்நுட்பங்களை வங்கி துறையில் புகுத்துவதிலும் இந்தியன் வங்கி முன்னிலை வகித்து வருவதைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப வங்கிச் சேவைகளை மாற்றியமைக்கவும், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மிக்க எண்மக் கட்டமைப்பை உருவாக்கவும் வங்கி கொண்டுள்ள அா்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.