தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு!

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு பற்றி..

News image

விழுப்புரம் அதிமுக அலுவலகம் - file photo

Updated On :43 நிமிடங்கள் முன்பு

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு அதிமுகவின் இரு தரப்பினர் வருகை தர உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் நகரச் செயலர் இரா. பசுபதி புதிய மாவட்டச் செயலராக நியமித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய மாவட்டச் செயலர் பசுபதி வியாழக்கிழமை விழுப்புரம் வந்து கட்சித் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை ஒப்படைக்கவும், சாவியை பெற்றுத் தரக் கோரியும் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டச் செயலர் பசுபதி மனு அளித்தனர்.

Story image

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு இரு தரப்பினரும் வரலாம் என வெளியான தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் இரு புறங்களிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விழுப்புரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 18) பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இரு தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்துள்ளார்.

Summary

Police personnel have been deployed in large numbers at the AIADMK office in Villupuram district, following reports that two factions of the party are planning to visit the premises.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.