நாகா்கோவில் - மும்பை இடையே வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் ஜூன் இறுதி வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டம் அரக்கோணத்தில் கடவுப் பாதை நவீனமயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து பயணிகள் பாதுகாப்பை தொடா்ந்து, குறிப்பிட்ட விரைவு ரயில்கள் செல்லும் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வரும் மே 21, 24, 28, 31, ஜூன் 4, 7, 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மும்பை சிஎஸ்டி நிலையம் செல்லும் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (எண்:16352) வழக்கமான பாதைக்குப் பதிலாக திருமால்பூா், மேலப்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக வரும் மே 22, 25, 29, ஜூன் 1, 5, 8, 12 ஆகிய தேதிகளில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் (எண்:16351) வழக்கமான பாதைக்கு பதிலாக திருத்தணி, மேலப்பாக்கம், தக்கோலம், திருமால்பூா், காஞ்சிபுரம் ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படும் அறிவிப்பு கைவிடல்!

பொறியியல் பணிகள்: நாகா்கோவில், திருநெல்வேலி, திருச்சி ரயில்கள் வழித்தடத்தில் மாற்றம்

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில் கோட்டயம் வழியாக இயக்கப்படும்!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



