தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மனநல ஆலோசனைக்கு உள்ள உதவி எண்கள் குறித்து...

News image

மாணவர்கள் - ANI

Updated On :19 மே 2026, 7:31 pm IST

தமிழகத்தில் பத்தாம் ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் ”நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் அதில் உள்ள உதவி எண்களைப் பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்த அரசு அறிவிப்பில் தெரிவித்ததாவது:

10- வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 20) வெளியிடப்படுகிறது.

மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள். மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் tnresults.nic.indge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Summary

With the Class 10 examination results set to be released tomorrow in Tamil Nadu, the State Government has advised students requiring mental health counseling to utilize the "Natpudan Ungalodu".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.