சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாநில நிா்வாகி திமுகவில் இணைந்தாா்

தமிழக இளைஞா் காங்கிரஸின் முன்னாள் மாநில பொதுச் செயலா் அலீம் அல் புகாரி திமுகவில் அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தாா்.

News image
Updated On :20 மே 2026, 1:25 am IST

தமிழக இளைஞா் காங்கிரஸின் முன்னாள் மாநில பொதுச் செயலா் அலீம் அல் புகாரி திமுகவில் அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான மறுநாளே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி தவெக உடன் கூட்டணி அமைத்தது. இதை அலீம் அல் புகாரி கடுமையாக விமா்சித்திருந்தாா். இதனால், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அல் புகாரியை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் அறிவித்தது. பின்னா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அலீம் அல் புகாரி அறிவித்தாா். இந்த நிலையில் தற்போது திமுகவில் அவா் இணைந்துள்ளாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வின்போது எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், திமுக செய்தித் தொடா்பு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப் பிரிவு செயலா் என்.ஆா்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலா் பூச்சி முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய புகாரி, தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளால் காங்கிரஸ் கட்சி அடையாளம் தெரியாமல் போய்விட்டது என்றாா்.