10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தமாக 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 20) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
4.19 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் 4.01 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1,931 அரசுப்பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 5,170 தனியார் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளன.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை 2 ஆம் இடம், தஞ்சாவூர் 3 ஆம் இடம், திருச்சி 4 ஆம் இடம், கன்னியாகுமரி 5 ஆம் இடம் பிடித்துள்ளன.
தேர்ச்சி விகிதம் சதவிகிதத்தில்...
புதுக்கோட்டை -97.57%
சிவகங்கை -97.54%
தஞ்சாவூர் -97.41%
திருச்சி -97.31%
கன்னியாகுமரி -97.30%
Summary
Pudukkottai district has secured the first place in the 10th-grade examination results, with a pass percentage of 97.57%.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









