தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) காலை வெளியாகின. இந்தத் தேர்வில் 94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தமாக 8.82 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதியிருந்தனர்.
இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (மே 20) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
மாணவா்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
Summary
The results of the Class 10 public examinations in Tamil Nadu were released this morning (May 20).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









