ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அடுத்த 3 மணி நேரம்... சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய வானிலை நிலவரம் பற்றி...

News image

சென்னை - ENS

Updated On :23 மே 2026, 1:41 pm IST

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 4 மணி வரை) 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,

"தமிழகத்தின் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்

செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பலத்த காற்று வீசியது. வெப்பம் குறைந்து மிதமான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

rain alert for 12 districts including chennai for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.