74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சென்னையில் மேகமூட்டம் ஏன்? வானிலை மையம் விளக்கம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கக் காரணம் ஏன் என்பது குறித்து வானிலை மையம் விளக்கம் கொடுத்துள்ளது.

News image

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் - DIN

Updated On :23 மே 2026, 2:01 pm IST

கடந்த ஒரு சில நாள்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

மிக ரம்மியமான காலநிலை நிலவுவதால், சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் சூளீரென்று உதயமாகிவிடும் சூரியன், இன்று சற்று ஓய்வெடுத்துக் கொண்டுள்ளது. இதனால் வெளிவேலைகளைத் தவிர்த்து வந்த மக்கள், இன்று நிம்மதியாக வெளியே கிளம்பியிருக்கிறார்கள்.

வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது,

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காற்றழுத்த சுழற்சி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இடையேயான தொடர்பே, இன்றைய வானிலை மாற்றத்துக்குக் காரணம். இதனால், சென்னையில் இன்று வெப்பநிலை ஓரளவுக்குக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் சென்னையில் இன்று காலை முதலே கடல் காற்று மணிக்கு 25 கிலோ மீட்டர் முதல் 30 கி.மீ. வேகத்தில் வீசத் தொடங்கிவிட்டது.

வழக்கமாக வடமேற்கு திசையில் இருந்து வீசும் வறண்ட காற்றுக்கு பதிலாக வங்கக் கடலில் இருந்து குளிர்ந்த, ஈரப்பதமான காற்று சென்னை நோக்கி வீசியதுதான், சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி மற்றும் ஆந்திரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையே சென்னையின் மேகமூட்டத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது ஒருசில தூறல்கள் விழுந்துள்ளது. இதே நிலை இன்று நீடிக்கும் என்றும் தெரிவக்கப்பட்டுள்ளது.

Summary

The Meteorological Department has explained why the sky is cloudy in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.