சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாக உள்ளது: டி.கே.எஸ். இளங்கோவன்

எடப்பாடி பழனிசாமியின் தலைமை கேள்விக்குறியாக உள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தது குறித்து...

 T.K.S. Elangovan

டி.கே.எஸ். இளங்கோவன் - படம் - ஏஎன்ஐ

Published On :

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாக உள்ளது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்று கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இது தொடர்பாக பல சிக்கல்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர், திங்கள்கிழமை (மே 25) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து அவர்களுடைய ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். மேலும், அதே நாளில் அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவும், சட்டப்பேரவையில் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தார்.

இது குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்ததாவது:

மூன்று பேர் மட்டுமல்ல; மேலும் ஒருவர் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியினை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளார். பிரச்னை, எடப்பாடி பழனிசாமியிடம்தான் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். அவருடைய விருப்பத்துக்கு எதிராக முதல்வர் விஜய்யை ஆதரித்தவர்களில் இந்த நான்கு பேரும் அடங்குவர். எடப்பாடியின் தலைமைப் பண்பு கேள்விக்குறியாக உள்ளது. தொண்டர்களின் பார்வையில் கட்சி எடப்பாடியின் தலைமைக்கு எதிராக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

Summary

DMK spokesperson T.K.S. Elangovan stated on Tuesday that the leadership qualities of AIADMK General Secretary Edappadi Palaniswami have come into question.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.