கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசைதவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை!
/

அதிமுகவா? தவெகவா? மக்களின் முடிவே என் முடிவு! - சி. விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேட்டி...

News image

இலுப்பூரிலுள்ள தனது இல்லத்தில் கட்சியினரைச் சந்தித்து கருத்து கேட்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். - DIN

Updated On :28 மே 2026, 3:14 pm IST

தொகுதி மக்களின் முடிவே தன் முடிவு என்றும் அவர்களின் கருத்தைக் கேட்பது முக்கியம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலி மலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ, நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, எனக்காக, கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆகியோர் என்ன சொல்கிறார்களோ அதனடிப்படையில் எனது முடிவு இருக்கும்.

என்னை நம்பி வாக்களித்த விராலி மலை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அந்த மக்களுக்கு நான் நன்றியுடன் இருப்பேன். அவர்களின் கருத்துகளை எல்லாம் கேட்டுதான் முடிவு செய்ய முடியும். மக்கள் கருத்தைக் கேட்காமல் நான் முடிவெடுக்க முடியாது.

இன்று காலை அனைத்துத் தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்தேன். அவர்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். யூகங்களுக்கு என்னிடம் பதில் இல்லை" என்று கூறினார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி என இரண்டாகப் பிரிந்த நிலையில் தற்போது மீண்டும் இரு அணிகளும் இணைந்துள்ளது. ஆனால் வேலுமணி அணியில் இருந்த சி. விஜயபாஸ்கரும் சி.வி. சண்முகமும் இன்னும் பழனிசாமியைச் சந்திக்கவில்லை. சி. விஜயபாஸ்கர் தவெகவில் இனைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Summary

Decision of the constituencys people is my decision: C. Vijayabaskar press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.