நெல்லை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சை பெற்ற அமைச்சருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமீபத்தில், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாங்கள் மற்றும் தங்களது உறவினர்களுக்கு உடல் பரிசோதனை, சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்வார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா தனது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றது கவனம் பெற்றுள்ளது.
அமைச்சரான மதன்ராஜாவின் தந்தை பெருமாளுக்கு வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மருத்துவர்களின் பரிந்துரையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு (மே 27) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது தந்தையை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த மதன் ராஜா, இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார். மேலும், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது கூடவே இருந்து தேவையான சிகிச்சைகள் அனைத்தும் சரியாக அளிக்கப்படுகிறதா? என்பதை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரவு முழுவதும் அங்கு தங்கி சிகிச்சையை கண்காணித்த அமைச்சர் மதன் ராஜாவின் நடவடிக்கை, மக்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் தந்தைக்குச் சிகிச்சை பெற்ற அமைச்சருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.
அரசின் உத்தரவை பின்பற்றும் வகையிலும், எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் மதன்ராஜா தனது தந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Summary
The Minister is receiving a flood of accolades for having his father treated at the Nellai Government Hospital.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










