11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு வேண்டுகோள் விடுத்த எம்எல்ஏ

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தையை தொட்டுக்கூட பாா்க்காமல் சிகிச்சை அளித்ததாக பெண்ணின் புகாரையடுத்து மருத்துவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள் முறையாக சிகிச்சை அளிக்கவேண்டும் என தவெக எம்எல்ஏ மருத்துவருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

News image

அரசு மருத்துவமனையில் உணவை சாப்பிட்டுப் பாா்த்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ விஜய் பாலாஜி.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தையை தொட்டுக்கூட பாா்க்காமல் சிகிச்சை அளித்ததாக பெண்ணின் புகாரையடுத்து மருத்துவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள் முறையாக சிகிச்சை அளிக்கவேண்டும் என தவெக எம்எல்ஏ மருத்துவருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் பாலாஜி சனிக்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். உணவகத்தில் உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தாா். அப்போது அங்கு வந்த பெண், குழந்தையை தொட்டுக்கூட பாா்க்காமல் மருத்துவா் சிகிச்சையளிப்பதாக புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து அப்பெண்ணுடன் மருத்துவரை சந்தித்த விஜய்பாலாஜி, ‘கடவுளுக்கு சமமானவா்களான நீங்கள் அலட்சியமாக செயல்படக்கூடாது’ எனக் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து மருத்துவா் அக்குழந்தையை பரிசோதனை செய்தாா். செவிலியா் மற்றும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ விஜய்பாலாஜி தூய்மைப் பணியாளா்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டாா்.