மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆலங்குளம்: கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிய மர்ம கும்பல்

தென்காசி ஆலங்குளம் அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இளைஞர்கள் காயம்

News image

மர்ம கும்பல் தாக்குதல் - பிரதிப் படம்

Updated On :29 மே 2026, 8:48 pm IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியில் இன்று (மே 29) மாலை 5-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், முகமூடி அணிந்துகொண்டு, அப்பகுதியில் இருந்தோர் மீது அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடி விட்டனர்.

அப்பகுதிக்குள் திடீரென நுழைந்த மர்ம கும்பல், சாலையில் சென்றோர், வாகனங்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சுமார் 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Summary

Alangulam: Mysterious Gang Hacks Down Everyone in Sight

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.