25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மேக்கேதாட்டு அணை தொடர்பான கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்ட புதுச்சேரி முதல்வர்

மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான கேள்விக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதில் கூற மறுத்துவிட்டார்.

Puducherry Chief Minister refuses to answer question regarding Mekedatu dam

புதுச்சேரி முதல்வர்.

Published On :29 மே 2026, 4:59 pm IST

மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான கேள்விக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதில் கூற மறுத்துவிட்டார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெற்றவுடன் அமைச்சராக ஏனாம் சட்டப்பேரவை உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பதவியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தார். பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை இருக்கையில் அமரவைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஆதரவாளர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, வெப்பம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் 4-ம் தேதி திறக்கப்படும் என்றும், மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை தொடர்ந்து வலுயுறுத்துவேன் என்றும், மேக்கேதாட்டு விவகாரம் குறித்து கேட்ட போது நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் பெற தமிழக அரசையும், கர்நாடக அரசையும் கேட்டு பெறுவோம் என்றார்.

மேலும் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பான கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

Summary

Puducherry Chief Minister Rangasamy refused to answer a question regarding the construction of the Mekedatu dam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.