ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்! - மு.க. ஸ்டாலின்நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்கும் தமிழர்கள்: தமிழ்நாடு நாளில் பிரதமர் மோடி வாழ்த்து!மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்திட உறுதியேற்போம்: தமிழ்நாடு நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை: இளநிலை பொறியாளர் இடைநீக்கம்

மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து...

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது மின்தடை. - கோப்புப் படம்

Updated On :

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் இளநிலை பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கடந்த வெள்ளிக்கிழமையில் (அக். 30) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.

தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். வருகைதந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து, சால்வை கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம் முடித்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்துக்கு வெளியே குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த மின்தடை மீண்டும் மின் விநியோகம் தொடர, சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்தடை தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

இதுகுறித்து விளக்கம் அளித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது,  குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, பிற்பகல் 3:30 மணி முதல் கோயில் முழுவதுமாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.

தரிசனம் முடித்த பிறகு கிழக்கு கோபுரத்துக்கு முன்னால் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த நேரத்தில், கோயில் மின் அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோயிலுக்குள் மின்தடை ஏற்பட்டது. உடனடியாக, மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் 2 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் மின் வெட்டு ஏற்பட்ட விவகாரத்தில் இளநிலை பொறியாளர் ஜானகிராமனை இடைநீக்கம் செய்து மின்சாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Junior Engineer suspended following a power outage during the Vice President CP RadhaKrishnan's visit to the Madurai Meenakshi Amman Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.