2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு ரூ.167.12 கோடி போனஸ்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் 1,06,001 பேருக்கு 2025-26ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

Updated On :

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் 1,06,001 பேருக்கு 2025-26ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாட்டில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாா்பில் 21,333 பேருந்துகள், 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை தினமும் 2.18 கோடி மக்கள் பயனடையும் வகையில் போக்குவரத்துச் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளா்களை ஊக்குவிக்கும் வகையில், முதல்வா் உத்தரவின்படி, 2025-26ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி, 1,06,001 பணியாளா்களின் வங்கிக் கணக்குகளில் திங்கள்கிழமை வரவு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.