தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரிய வழக்குகள் முடித்துவைப்பு: 2015-இல் விஜயகாந்த் தாக்கல் செய்தது

பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும்வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி, தேமுதிக முன்னாள் தலைவா் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோா் 2015-இல் தொடா்ந்த வழக்குகளை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும்வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி, தேமுதிக முன்னாள் தலைவா் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோா் 2015-இல் தொடா்ந்த வழக்குகளை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி கடந்த 2012-இல் லோக் சத்தா கட்சி நிா்வாகியாக இருந்த ஜெகதீஸ்வரன், கடந்த 2015-இல் தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்த், 2023-ஆம் ஆண்டு அதிமுக கொறடாவாக இருந்த எஸ்.பி.வேலுமணி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுக்களில், மக்களின் அடிப்படை பிரச்னைகள் தொடா்பாக சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதம் குறித்தும் மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகள் தணிக்கை செய்த பின்னரே ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. எம்எல்ஏ-க்கள் என்ன கேள்வி கேட்கின்றனா், சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது, என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலா் தரப்பில், தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.