FOLLOW US

ON GOOGLE DISCOVER

நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ரீல்ஸ்களாக பேரவை நிகழ்வுகள்! ஒரு தலைமுறையையே அரசியல்படுத்துகிறார் முதல்வர் விஜய்! ராஜ்மோகன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கருத்து..

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 5:25 pm IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்ப்பதாகவும் ஒரு தலைமுறையையே முதல்வர் விஜய் அரசியல்படுத்துகிறார் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

வ.உ. சிதம்பரனார் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:

மோட்டார் ஸ்மார்ட் சிட்டி அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததற்கு நடிகர் அஜித் பாராட்டு தெரிவித்ததற்கு அமைச்சர் ராஜ்மோகன் நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவையை பிக் பாஸ் போல மாற்றி இருப்பதாக சீமான் விமர்சனம் செய்ததற்கு பதில் அளித்த அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தாழ்த்தியும் அரசியல் நிகழ்ச்சி உயர்த்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உவமைக்காக அவர் அப்படி சொல்லி இருப்பார் எனக் கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்து குழந்தைகள் பேசும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் எனக்கு அதை பகிர்ந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போது 9.30 மணி ஆகும் என அனைவரும் காத்திருக்கும் சூழல் தற்போது உருவாகி இருப்பதாக கூறினார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நிறைய தொழிற்சங்கங்களிடம் பேச வேண்டி இருந்தது. பாலன் இல்லம் சென்றபோது இது குறித்தும் அதேபோல அரசியல் ரீதியாகவும் நிறைய பேசினோம். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதற்குப் பிறகு ஆதரவு கூட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுத்ததாகவும், எங்களுடைய உறவு ஆழமாக வலுப்பெற்று இருப்பதாகவும் கூறினார்.

சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்களும் ரீல்ஸ்களாக போட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை ரீல்ஸ்களாக மாற்றி வருகின்றனர்.

ஒரு தலைமுறையையே அரசியல்படுத்திக் கொண்டிருக்கிறார் எங்கள் தலைவர். இதை நீங்கள் வரவேற்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருவது தொடர்பான கேள்விக்கு, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மூத்த அரசியல்வாதி, அவர் அதை சட்டரீதியாக எதிர்கொள்வார். மேலும் எங்கள் தலைவர் சொன்னதுபோல் தான்.. தொடமாட்டோம், தொடவிடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம்" என்று கூறினார்.

Summary

Party events as Reels; Chief Minister Vijay is politicizing an entire generation: RajMohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.