தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

கோவை - பெருந்துறை சாலையில் முதல்வர் விஜய் சாலைவலம்!

கோவையிலிருந்து பெருந்துறை செல்லும் சாலையில் முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

Vijay road show

முதல்வர் விஜய் சாலைவலம் - TNDIPR

Updated On :

கோவை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக பெருந்துறைக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் புறப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் அரசுத் திட்டங்களை முதல்வர் விஜய் இன்று தொடக்கி வைக்கவுள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்த முதல்வர், சாலை வழியாக பெருந்துறைக்கு புறப்பட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் அவினாசி, பெருமாநல்லூர், விஜயமங்கலம் சென்று, சுங்கச் சாவடி, சிப்காட் நுழைவாயில், பெருந்துறை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், குன்னத்தூா் நான்கு சாலை, அண்ணா சிலை வழியாக விழா நடைபெறும் மண்டபத்துக்கு முதல்வா் செல்கிறாா்.

பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி முதல் விழா நடைபெறும் இடம் வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் முதல்வரை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி உள்பட ரூ. 1,100 கோடியில் சுமாா் 5 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். மேலும், ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா் தொடங்கிவைக்கிறாா்.

Summary

Chief Minister Vijay set off from Coimbatore to Perundurai by road!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER