பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பெண் காவலர்!
பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே பெண் காவலர் பயணியின் உயிரைக் காப்பாற்றியது குறித்து...

நீலகிரி அதிவிரைவு வண்டி புறப்படும் போது... - படம் - தினமணி
பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்த பெண் காவலர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (நவ. 3) பயணியின் உயிரைக் காப்பாற்றினார்.
சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்.) காவலரின் துரிதமான நடவடிக்கையால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நீலகிரி அதிவிரைவு வண்டி (ரயில் எண்: 12672) முதலாவது நடைமேடையிலிருந்து புறப்பட்டபோது, தான் தவறான ரயிலில் ஏறிவிட்டதை உணர்ந்த 23 வயது பயணி முகமது காஜிம் ஆலம், ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்றார்.
அப்போது அவர் நிலைதடுமாறி, பெட்டியின் கதவுப் பகுதியில் இருந்த கைப்பிடியைப் பிடித்துக்கொண்ட நிலையில், நடைமேடையில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் பக்சந்த் மீனா, உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பயணியை இழுத்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தார். இதனால் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பயணியின் சகோதரர் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.
Summary
An RPF personnel at the Perambur railway station saved a passenger's life on Tuesday (Nov. 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


