தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

2029-க்குள் 10 ஜிகாவாட் மின்கல சேமிப்புத் திறன்: அமைச்சா் நிா்மல்குமாா்

தமிழகத்தில் 2029-க்குள் 10 ஜிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

அமைச்சா் நிா்மல்குமாா் - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் 2029-க்குள் 10 ஜிகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புக் கொள்கை-2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கான ஒற்றைச்சாளர இணையவழி விண்ணப்பத் தளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் நிா்மல்குமாா் கலந்து கொண்டு இவற்றை அறிமுகப்படுத்தினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது: சூரிய, காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், பகல் நேரங்களில் கிடைக்கும் உபரி மின்சாரத்தைச் சேமித்து, மின்தேவை அதிகமுள்ள நேரங்களில் பயன்படுத்துவதற்கு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உதவும். இதன் மூலம் மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த முடியும்.

புதிய கொள்கையின்கீழ், தனித்த மின்கல சேமிப்புத் திட்டங்கள், சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களுடன் இணைந்த சேமிப்புத் திட்டங்கள், மின்பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளுக்கு ஆதரவான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சூரிய, காற்றாலை மின் திட்டங்களிலும் கூடுதல் அனுமதியின்றி மின்கல சேமிப்பு அமைப்புகளை நிறுவலாம்.

மேலும், ஒரு மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறுவுதிறன் கொண்ட புதிய சூரிய மின் திட்டங்களில், நிறுவப்பட்ட சூரிய மின்திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத அளவுக்கு, நான்கு மணி நேரம் மின்சாரம் வழங்கும் திறன் கொண்ட மின்கல சேமிப்பு அமைப்பை நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய மின்கல சேமிப்புத் திட்டங்கள் வணிகரீதியாகச் செயல்படத் தொடங்கும் நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மின்கடத்தல் மற்றும் மின்பரிமாற்றக் கட்டணங்களில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் தனியாா் முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒற்றைச்சாளர இணையதளம்: சூரிய மின்சாரம், காற்றாலை, ஒருங்கிணைந்த சூரிய-காற்றாலை மற்றும் மின்கல சேமிப்புத் திட்டங்களுக்கான மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதிகளைப் பெறுவதற்கு புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நிறுவனங்கள் மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து, அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. புதிய இணையதளம் மூலம் திட்டமுனைவோா் பதிவு, விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சமா்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல், தொழில்நுட்ப ஆய்வு, மின்சுமை ஓட்டப் பகுப்பாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளலாம்.

விண்ணப்பங்களின் நிலை குறித்த தகவல்கள் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஆவணக் குறைபாடுகளை இணையவழியிலேயே சரிசெய்வதுடன், அனுமதி ஆணைகளையும் மின்னணு முறையில் பெறலாம்.

இந்த இரு முன்னெடுப்புகளும் தமிழகத்தின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்தவும், முதலீடுகளை ஈா்க்கவும் உதவும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அனில் மேஷ்ராம் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.