ஏடிஎம்-ல் திருட வந்தவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை!
ஏடிஎம்-ல் திருட வந்தவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பற்றி..

ஏடிஎம் திருடர் - பிரதி படம் - file photo
ஏடிஎம்-ல் திருட வந்த திருடன், காவல்துறையிடம் மாட்டிக்கொண்டபோது, ஏன் ஏடிஎம் மையத்துக்குள் வந்தாய் என்று காவல்துறை கேட்டதற்கு, திருடன் சொன்ன பதிலை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஏடிஎம் மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு பணத்தைத் திருட வந்தவர், வசமாக சிக்கிய நிலையில், ஏடிஎம் மையத்தை சுத்தம் செய்ய வந்தேன் என்று காவல்நிலையத்தில் விசாரணையின்போது சாமர்த்தியமாக பதில் சொல்லியிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி முன்பு மக்கள் தேவைக்காக ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு நபர் ஏடிஎம் மையத்தின் வெளியில் உள்ள அலாரம் வயரை கட் செய்துவிட்டு, உள்ளே சென்று அந்த நபர் ஷட்டர் கதவை மூடிக்கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு அலர்ட் மெசேஜ் சென்றுள்ளது.
இதையடுத்து வங்கி நிர்வாகம் பூதலூர் பகுதியில் உள்ள வணிகர்களுக்கு தகவல் கொடுத்துள்ளது. அவர்கள் வந்து கதவை முழுமையாக மூடிக்கொண்டு பூதலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் உள்ளே இருந்த நபரை கைது செய்து பூதலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பெயர் மணிகண்டன், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவருடன் கூட்டாளிகள் யாராவது வந்தார்களா, இவர் மீது ஏற்கனவே ஏதும் வழக்குகள் இருக்கிறதா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நள்ளிரவில் ஏடிஎம் மையத்தின் பூட்டை உடைத்து திருட முயன்ற விடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Police left shocked by the response given by a man who came to commit a robbery at an ATM!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

