வவ்வால்கள் இருக்கிறது... பட்டாசு வேண்டாம்...! கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு!
வவ்வால்கள் இருக்கிறது... பட்டாசு வேண்டாம்... என்று துண்டு பிரசுரம் கொடுத்த கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு

வவ்வால்கள் - பிரதி படம் - கோப்பிலிருந்து
சேலம் : சேலம் மாநகரம், அம்மாபேட்டைக்கு உள்பட்ட அய்யாசாமி பசுமை பூங்காவில் வவ்வால்கள் இருப்பதால், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கவுன்சிலர் வீடு வீடாகச் சென்று பிரசுரம் கொடுத்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை என்பது இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் பட்டாசு என்பது தவிர்க்க முடியாதாகிவிட்டது. பட்டாசு வெடிப்பதால் காலங்காலமாக வீடுகளுக்கு அருகில் வசிக்கும் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அது இடம் விட்டு இடம் மாற வாய்ப்புள்ளது. குடும்பம் குடும்பமாக வாழும் பறவைகள் தீபாவளி திருநாளில் பறந்து போகவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சேலம், அம்மாபேட்டை 34 வது டிவிசன் உள்பட்ட அய்யாசாமி பசுமை பூங்காவில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றன. எப்போது பார்த்தாலும் பறவைகளின் சத்தமும் காதுக்கு இனிமையான ரீங்காரமும் எப்போதும் கேட்ட வண்ணம் இருக்கும்.
பறவைகளில் பாலூட்டியாகக் கருதப்படும் இந்த வவ்வால்களை பாதுகாக்க பல ஆண்டுகளாக இந்த பொது மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முத்தாய்ப்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ என்பவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது யாரும் வவ்வால் வசிக்கும் இடத்திற்கு சென்று பட்டாசு வெடிக்கக் கூடாது, அது அருகில் தொந்தரவு செய்யக்கூடாது, மனிதர்களோடு மனிதராக வாழ்ந்து இருக்கும், வவ்வாலுக்கு மதிப்பளிப்போம், அதனையும் வாழ வைப்போம் என வலியுறுத்தி ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்
அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வவ்வால் வசிக்கும் இடத்திற்கு அருகில் யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி பொது மக்களோடு இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பொதுமக்களோடு நேரடியாக சென்று தூண்டு பிரசங்கங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்
இது குறித்து அவர் கூறும் போது மனித இனத்திற்கு இணையாக பாலூட்டி வகையைச் சேர்ந்த வவ்வாலுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்த இனத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் இதனால் பறவை இனம் பாதுகாப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் ஒவ்வொருவரும் பறவைகளை பாதுகாத்து சுற்றுச்சூழலை பேணிக்காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
மாமன்ற உறுப்பினரின் இந்த தொலைநோக்கு பார்வைக்கு பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்பட்டுள்ளது
Summary
Bats are present... no firecrackers, please...! Councilor receives a shower of praise!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

