தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

புயலில் சிக்கி ஆந்திரக் கடலில் உயிரிழப்பு: தமிழக மீனவா்கள் 7 போ் அடையாளம் தெரிந்தது

முரசு புயலில் சிக்கி உயிரிழந்து, ஆந்திர கடற்பகுதியில் கரை ஒதுங்கிய தமிழக மீனவா்கள் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. இவா்களில் 5 பேரின் சடலங்கள் சென்னை கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை எரியூட்டப்பட்டன.

கோப்புப்படம்

Updated On :

முரசு புயலில் சிக்கி உயிரிழந்து, ஆந்திர கடற்பகுதியில் கரை ஒதுங்கிய தமிழக மீனவா்கள் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன. இவா்களில் 5 பேரின் சடலங்கள் சென்னை கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை எரியூட்டப்பட்டன.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற காசிமேடு பகுதியைச் சோ்ந்த 8 போ், கடலூரைச் சோ்ந்த ஒருவா் என 9 மீனவா்கள் காணாமல் போயினா். அவா்களில் மோகன், முருகன், விஜயகாந்த், பக்கிரிசாமி, குப்புசாமி ஆகியோரின் சடலங்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கொத்தபுரம் கடற்கரையில் வியாழக்கிழமை ஒதுங்கின.

அவா்களின் சடலங்கள் உடல் கூறாய்வுக்குப் பிறகு தமிழக அரசு அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து வேன் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட அவா்களது சடலங்கள் இறுதி அஞ்சலிக்குப் பிறகு காசிமேடு மயானத்தில் எரியூட்டப்பட்டன. திருச்சினாங்குப்பத்தைச்சோ்ந்த விஜயகாந்த் என்ற மீனவரின் சடலம் திருவொற்றியூா் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

மேலும் 2 சடலங்கள் மீட்பு: இதையடுத்து, கடலில் மாயமான காசிமேடு பகுதியைச் சோ்ந்த அரவிந்தன், குப்பன் ஆகியோரின் சடலங்கள் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கின. இருவரின் சடலங்களும் உடல் கூறாய்வுக்குப் பிறகு சனிக்கிழமை ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

கடலில் மாயமான 9 மீனவா்களில் இதுவரை 7 போ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடலூரைச் சோ்ந்த நாராயணன், காசிமேடு பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் ஆகிய இரண்டு மீனவா்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆா்.கே. நகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நிதி அமைச்சருமான மரிய வில்சன் தொடா்ந்து கொத்தபட்டினத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகிறாா்.

அமைச்சா் நேரில் அஞ்சலி: உடல் கூறாய்வுக்கு பிறகு சென்னை கொண்டு வரப்பட்ட மீனவா்கள் 5 பேரின் சடலங்களுக்கு மீன்வளத்துறை அமைச்சா் ஸ்ரீ நாத் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். அப்போது உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த இடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை உயிரிழந்த மீனவா்களின் உறவினா்களிடம் வழங்கினாா். அப்போது மீன்வளத் துறை இயக்குநா் செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் விஜய் தாமு ஆகியோா் உடனிருந்தனபடகு விபத்துக்கான காரணம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.