மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)

யுபிஎஸ்சி: அரசுப் பயிற்சி மையத்தில் 79 பேர் தேர்ச்சி! ஆளுமைத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

அகில இந்திய குடிமை பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயின்ற 290 பேரில் 79 பேர் தேர்ச்சி...

UPSC Mains Exam: 79 candidates qualified in AICSCC, Tamilnadu

கோப்புப் படம் - ENS

Updated On :

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு மற்றும் ஆளுமைத் தோ்வு ஆகிய மூன்று கட்டங்களாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், 1,016 காலிப் பணியிடங்களுக்கு நிகழாண்டு ஆக. 21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வில் 2,526 தோ்வா்கள் தோ்ச்சி பெற்று ஆளுமைத் தோ்வுக்கு தகுதிபெற்றுள்ளனா். இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணைத்தளத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இதில் தமிழகத்தில் அகில இந்திய குடிமை பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயின்ற 290 பேரில் 79 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 2025ல் 376 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 87 பேர் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொடர்ந்து ஒரு மாதகால பயிற்சியும் மாதிரி ஆளுமைத் தேர்வும் நடத்தப்பட உள்ளது என்றும் பிற மையங்களில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமை பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையில் இப்பயிற்சி மையம் திறம்பட செயல்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2026 ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற ஆர்வலர்களில் 29 மகளிர், 4 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதன் முறையாக 1 திருநம்பி பாலினத்தவர் உட்பட 79 ஆர்வலர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தற்போது இம்மையத்தின், சார்பாக முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஒரு மாதகால பயிற்சியும் மாதிரி ஆளுமைத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆளுமைத் தேர்வுக்கான ஒரு மாத கால பயிற்சி விரைவில் தொடங்கப்படுவது  குறித்தான அறிவிப்பு நவம்பர் மாத இறுதி வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இப்பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமல்லாமல் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும் இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். 

மேலும் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற புலன எண் (Whatsapp) மூலமாகவும் aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

UPSC Mains Exam: 79 candidates qualified in AICSCC, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.