கெங்கவல்லி கால்நடை சந்தையில் ரூ. 2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
கெங்கவல்லி கால்நடை சந்தையில் 2.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக..

கெங்கவல்லி அருகே நடைபெற்ற கால்நடை சந்தையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை இரண்டரை கோடிக்கு மேல் வர்த்தகம் நடிடைபெற்றது.
சேலம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெடாவூரில் நடைபெற்ற கால்நடை சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மேச்சேரி, தலச்சேரி, செம்மரி, நாட்டின ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதில் ஆத்தூர், சேலம், பெரம்பலூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி,மதுரை, தேனி,தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி அவர்கள் கொண்டு வந்திருந்த வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
மேலும், ஆடுகள் இங்கு விற்பனைக்கு வந்த குட்டி ஆடு முதல் பெரிய ஆடுகள் வரை 2500 முதல் 27 ஆயிரம் வரை விற்கப்பட்டதில் 2000 ஆடுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதில் இரண்டரை ( 2.5) கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
வழக்கத்தைவிட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தையில் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

