குரியன் குழு கலைப்பு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புசண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு குதிரை பேரம் வழக்கு: அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு!

திரிஷா விஜய் என்ற பெயரில் புத்தகமா? அம்பையில் சீமானுக்கு ஆதரவா? நயினார் நாகேந்திரன் பதில்!

பெரியார் அறிவுலக ஊழல், தமிழக இடைத்தேர்தல், தவெக ஆட்சி குறித்து நயினார் நாகேந்திரன் பதில்...

TN BJP president Nainar Nagenthran

நயினார் நாகேந்திரன் - IANS

Updated On :

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன்,

"உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு தி.மு.க.வினரும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினரும் செயல்பட்டு வருகின்றனர். நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குழுவில் இடம்பெற்றவரே தெரிவித்துள்ள நிலையில், இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை?

இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. திரிஷா விஜய் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவரின் புத்தகம் இருந்ததாக கூறப்படும் நிலையில், உண்மையிலேயே அந்த பெயரில் புத்தகம் உள்ளதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக செயல்பட்ட ஆய்வாளர் தற்போது ரூ. 5 கோடி லஞ்சம் பெற்றதாக சிக்கியுள்ளார். கடந்த கால தி.மு.க. ஆட்சியில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இதன் காரணமாகவே அந்த ஆட்சி வீழ்த்தப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. திருக்கார்த்திகை தீபத்திருநாளில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இந்த அரசு நிச்சயமாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஊழல், கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மாயமான 7 வயது சிறுமியை ஒரு மாதமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த 6 மாதங்களில் மக்களின் மனநிலை வெகுவாக மாறியுள்ளது. அரசு ஊழியர்கள் பணியாற்ற முடியாத சூழல் நிலவுவதால் 300 பேர் விருப்ப ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி 10 வந்தே பாரத் ரயில்கள், தூத்துக்குடி மற்றும் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்.

இதனால் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நல்லிணக்கம் இருப்பதாக கூறிவிட முடியாது. தமிழக வெற்றிக் கழகம் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கி குதிரை பேரத்தை தொடங்கி வைத்தது. அதன் தொடர்ச்சியாக மேலும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் இழுக்கப்பட்டனர். இதனால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

அம்பை தொகுதியில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. தேர்தல் வரும்போது கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தலைமைக்கு தெரிவிப்பார்கள்.

அனைத்து கட்சிகளும் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க முன்வந்தால், நாங்களும் தேசிய தலைமையுடன் பேசி முடிவை அறிவிப்போம்.

தனுஷ் வருகை குறித்து கேட்கிறீர்கள். தனுஷ் பின்னால் பாஜக இல்லை. யார் பின்னாலும் நாங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஜக ஒரு சுயம்பு கட்சி. இந்தியா முழுவதும் தனித்து செயல்பட்டு வரும் மிகப்பெரிய கட்சி" என்று கூறினார்.

Summary

Nainar nagendran on periyar arivulagam book procurement row

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.