6 மாத கால தவெக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி இல்லை! இபிஎஸ் கடும் விமர்சனம்!
தவெக ஆட்சி மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்...

எடப்பாடி பழனிசாமி - ENS
6 மாத கால தவெக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி இல்லை என்றும் இது சோதனையான ஆட்சி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 467 தொழிற்சலை நிறுவனங்கள், சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதால் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
ஆய்வு செய்தபிறகு அதில் குறைபாடுகள் இருந்தால் கால அவகாசம் கொடுத்து சரி செய்யச் சொல்லலாம். உடனே ஆலைகளை மூடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மின் கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20 -க்கு ஊழல் செய்தது தவறு என்று இதே மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னதாக சொன்னார். இன்று ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50 -க்கு கொள்முதல் செய்திருக்கிறார்கள்.
உரிய நேரத்தில் மின்சாரம் தடையில்லாமல் கொடுத்தால்தான் தொழிற்சாலைகள் இயங்கும், விவசாயம் சரியாக நடைபெறும்.
தமிழகத்தில் அரசி விலை உயர்ந்துள்ளது. ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி மட்டுமின்றி காய்கறி, எண்ணெய், சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. இந்த தவெக ஆட்சியில் மக்களுக்கு சோதனைகள்தான் ஏராளம். 6 மாத காலம் தவெக ஆட்சியில் நிம்மதி இல்லை. தவெக ஆட்சி மக்களுக்கு சோதனை ஆட்சி" என்று கூறினார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami levels sharp criticism against the TVK administration
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

