மலைக்கிராமப் பெண்ணுக்கு செவிலித்தாயாகமாறி உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!
ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குவியும் பாராட்டுகள்.

மலைக்கிராமப் பெண்ணுக்கு செவிலித்தாயாகமாறி உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்! - படம்: தினமணி
ஈரோடு: மலைக்கிராமப் பெண்ணுக்கு செவிலித்தாயாகமாறி உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, மலை கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், ஒசூர் அருகில் உள்ள மணியாச்சிப் பள்ளம் என்ற வனப்பகுதி கிராமத்தில் இருந்து திங்கள்கிழமை 6.45 மணி அளவில் பெண்ணுக்கு பிரசவ வலி என 108 அவசர ஊர்திக்கு அழைப்பு வந்தது.
அழைப்பு வந்த உடனே, ஒசூர் கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அங்கு பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கணேஷ் என்பவரின் மனைவி பிரியா (19), என்ற பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வனப்பகுதிக்குள் வரும் போது பிரசவ வலி அதிகமானதால், மேலும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை உணர்ந்த அவசரகால மருத்துவ நுட்புநர் ரா. சந்திரசேகரன் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
அவரது துரிதமான செயல்பாடு மற்றும் சிறப்பான மருத்துவ சிகிச்சையின் காரணமாக காலை 7.25 மணி அளவில் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை, ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பாக பிறந்தது.
பிறந்த உடனே தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான அனைத்து முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் இருவரும் பர்கூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இந்த உயிர்காக்கும் பணியை மிகச் சிறப்பாகவும், துணிச்சலுடனும் செய்த ஓட்டுநர் பிரபாகரன் மற்றும் அவசரகால மருத்துவ நுட்புநர் ரா. சந்திரசேகரன் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
Summary
The residents of a hill village expressed their appreciation for the ambulance staff who stepped in to act as caregivers for a woman from the village.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


