தீபாவளி பட்டாசு வெடிப்பு விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் 237 வழக்குகள் பதிவு!பெரியார் அறிவுலக ஊழல்: பபாசி நிர்வாகிகளுடன் ராஜ்மோகன் ஆலோசனை!இதுவரை 200 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சிதீபாவளியன்று அசுரர்களின் ஆட்சியை நினைவு படுத்துகிறதா தவெக? டிடிவி தினகரன் கேள்வி!பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் முறைகேடு: எழுத்தாளர்கள் கூட்டறிக்கை!பட்டாசு சப்தத்தைவிட பட்டா கத்திகளின் சப்தமே அதிகம்! உதயநிதி ஸ்டாலின்புற்றுநோய் மருந்துகள்! குறைக்கப்பட்ட விலைப் பட்டியல் அமல்!தண்ணீர் கேட்டவர் மீது தாக்குதல்! பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கருக்கு அதிமுக கண்டனம்!தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 8 கொலைகள்!தேனியில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கண்டித்த எஸ்.ஐ. படுகொலை!காற்று மாசு! சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு!இஸ்ரேலில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் காடி ஐசென்கோட்!

ஒரு மனித உயிருக்கு ரூ. 40 லட்சம்தான் மதிப்பா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழகத்தில் தொடர் கொலைகள் குறித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

DMDK MLA Premalatha

பிரேமலதா - ENS

Updated On :

கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் – தமிழக அரசுக்கு கடும் கண்டனம்!

தமிழகத்தில் தொடர்ந்து வெளியாகி வரும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

நேற்று ஒரே நாளில் காவலர் உள்பட 9 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் கவலைக்குரியவை. இந்தச் சம்பவங்கள் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு மனித உயிருக்கு ரூ. 40 லட்சம்தான் மதிப்பா? உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டுமே அரசின் கடமை அல்ல; இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே உண்மையான பொறுப்பு.

சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதும், காவல்துறையினரே வன்முறைக்குப் பலியாவதும் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

பொதுமக்களின் உயிருக்கும், காவல்துறையினரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை.

வெறும் அறிவிப்புகளும் ஆய்வுக் கூட்டங்களும் போதாது. கொலைக் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து முதல்வர், மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிப்பது நிவாரணத் தொகை அல்ல; அவர்களின் உயிரைப் பாதுகாப்பதே அரசின் முதன்மையான கடமை" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Premallatha Vijayakanth urges strict action against the murders in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.