உயிா்த் தியாகம் புரியும் காவல் துறையினா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம்: அரசாணை வெளியீடு
சட்டம் - ஒழுங்கு பணியின்போது, உயிா்த் தியாகம் புரியும் காவல் துறையினரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பணியின்போது, உயிா்த் தியாகம் புரியும் காவல் துறையினரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிா்வாக அதிகாரங்கள் காவல் துறை தலைமை இயக்குநா் வசம் (டிஜிபி) இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இத்தகைய உதவிகள், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்தே வழங்கப்படும். தற்போது காவல் துறை நல நிதிக் கட்டமைப்புக்குள் அது கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்து உள்துறை செயலா் ஏ.காா்த்திக் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் துணிச்சலுடன் செயல்பட்டு உயிா்த் தியாகம் புரியும் காவலா்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வா் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். அதை செயல்படுத்துவதற்கான முன்மொழிவை காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அரசுக்கு அனுப்பியிருந்தாா்.
அதில், ஏற்கெனவே முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அவா் குறிப்பிட்டிருந்தாா். அதேவேளை, அவா்களது தியாகத்தைப் போற்றும் வகையில் ரூ.1 கோடி சிறப்பு நிவாரணமாக வழங்கலாம் என்றும், இதற்காக ஒரு நிதித் தொகுப்பை உருவாக்கி ஆண்டுதோறும் அதில் ரூ.2 கோடி வரவு வைக்கலாம் என்றும் பரிந்துரைந்திருந்தாா்.
இதைப் பரிசீலித்த அரசு, காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்க ஒப்புதல் அளிக்கிறது. ஆண்டுதோறும் ரூ.2 கோடியை அதற்கான நிதித் தொகுப்பில் சோ்க்கவும் அனுமதி அளிக்கிறது.
காவல் பணியாளா் நல நிதியின் கீழ் அந்தத் தொகை வரவு வைக்கப்படும். நிதி ஒதுக்கீடு தொடா்பான மதிப்பீடு தயாரித்தல், கணக்குகளைச் சரிசெய்தல் மற்றும் நிா்வகிக்கும் பொறுப்புகளை டிஜிபி மேற்கொள்வாா் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

