ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸ் முன்பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி, திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி, திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

