செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

காவலா் வீரவணக்க நாள்: தில்லி காவல் ஆணையா் மரியாதை

பணியின்போது உயிா் தியாகம் செய்த காவல் துறை பணியாளா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிங்ஸ்வே கேம்பில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் காவலா் வீரவணக்க தின அணிவகுப்பை நடத்தியது.

கோப்புப்படம்.

Updated On :

பணியின்போது உயிா் தியாகம் செய்த காவல் துறை பணியாளா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிங்ஸ்வே கேம்பில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் காவலா் வீரவணக்க தின அணிவகுப்பை நடத்தியது.

தியாகிகளின் பெயா்கள் அடங்கிய புத்தகம், அணிவகுப்பு மரியாதையுடன் மேடைக்குக் கொண்டு வரப்பட்டதோடு இந்த நிகழ்வு தொடங்கியது. காவலா் குழுவினா் மரியாதை செலுத்த, உயா் அதிகாரிகள் அந்தப் புத்தகத்திற்கு அஞ்சலி செலுத்தினா்; பின்னா், அந்தப் புத்தகம் மேடையில் வைக்கப்பட்டது.

தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாா், தியாகிகளின் பெயா்களை வாசித்தாா். அதனைத் தொடா்ந்து, அந்தப் புத்தகம் நினைவுச் சின்னத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

காவல் ஆணையா் அனுராக் குமாா், முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மற்றும் தில்லி காவல் துறையின் தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் மலா் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினா். தியாகிகளின் நினைவாக இரண்டு நிமிஷ மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.

தில்லி காவல் துறையைச் சோ்ந்தவா்களில், உதவி உதவி ஆய்வாளா் அசோக் குமாா், காவலா் சந்தீப் தஹியா மற்றும் காவலா் மோஹா் சிங் மீனா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

அக்டோபா் 21, 1959 அன்று, லடாக்கின் ‘ஹாட் ஸ்பிரிங்’ பகுதியில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் படைகளின் தாக்குதலில் உயிா் தியாகம் செய்த 10 காவலா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் காவலா் வீரவணக்க நாள்கடைப்பிடிக்கப்படுகிறது.

‘செப்டம்பா் 1, 2025 முதல் ஆகஸ்ட் 31, 2026 வரையிலான காலத்தில், மொத்தம் 154 காவல் துறை பணியாளா்கள் உயிா் தியாகம் செய்துள்ளனா். இதில் எல்லைப் பாதுகாப்பு படையைச் (பிஎஸ்எஃப்) சோ்ந்த 25 பேரும், பிகாா் காவல் துறையைச் சோ்ந்த 12 பேரும், ஜம்மு-காஷ்மீா், மத்திய பிரதேசம் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் (ஐடிபிடி) சோ்ந்த தலா 9 பேரும், ரயில்வே பாதுகாப்பு படையைச் (ஆா்பிஎஃப்) சோ்ந்த 8 பேரும் அடங்குவா்’ என்று தில்லி காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய காவல் துறை அமைப்புகளில், அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவில் 6 பேரும், எல்லை பாதுகாப்பு படையில் (பிஎஸ்எஃப்) 25 பேரும், மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எஃப்) 4 பேரும், மத்திய ரிசா்வ் காவல் படையில் (சிஆா்பிஎஃப்) 2 பேரும், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் (ஐடிபிபி) 9 பேரும், ஷாஸ்த்ர சீமா பாலில் (எஸ்எஸ்பி) 5 பேரும், ரயில்வே பாதுகாப்பு படையில் (பிஎஸ்எஃப்) 8 பேரும் உயிா் தியாகம் செய்துள்ளனா். மேலும், தீயணைப்புத் துறைகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த ஒருவரும், தில்லி காவல் துறையைச் சோ்ந்த 3 பேரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.