
காவல் பணித்திறன் போட்டி: கோவை மாநகர துப்பறியும் நாய்களுக்கு 2-ஆம் பரிசு
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் பணித்திறன் போட்டிகளில் கோவை மாநகரக் காவல் துறையின் துப்பறியும் நாய்களும், அவற்றின் கையாளுநா்களும் சிறப்பிடம் பிடித்தனா்.

மோப்பநாய் மதனா, தலைமைக் காவலா் அசோக்குமாா். ~மோப்பநாய் மலா், தலைமைக் காவலா் செந்தில்குமாா்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் பணித்திறன் போட்டிகளில் கோவை மாநகரக் காவல் துறையின் துப்பறியும் நாய்களும், அவற்றின் கையாளுநா்களும் சிறப்பிடம் பிடித்தனா்.
தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் படைத்தலைவரின் வழிகாட்டுதலின்படி, மாநில அளவிலான காவல் பணித்திறன் போட்டிகள் ஆவடியில் உள்ள தமிழக சிறப்புக் காவல் படை பட்டாலியன் வளாகத்தில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கி 25 வரை நடைபெற்றன.
இப்போட்டியின் போதைப்பொருள் மற்றும் வெடிபொருள் துப்பறியும் நாய்கள் பிரிவில் கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் பங்கேற்ற துப்பறியும் நாய்கள் இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளன.
போதைப்பொருள் கண்டறியும் நாய் ‘மதனா’ மற்றும் அதன் கையாளுநரான தலைமைக் காவலா் மு.அசோக்குமாா் இரண்டாம் பரிசை பெற்றனா். இதேபோல, வெடிபொருள் கண்டறியும் நாய் ‘மலா்’ மற்றும் அதன் கையாளுநரான தலைமைக் காவலா் பி. செந்தில்குமாா் ஆகியோரும் இரண்டாம் பரிசு வென்றனா்.

இந்தச் சாதனை புரிந்த தலைமைக் காவலா்கள் மற்றும் துப்பறியும் நாய்களை, மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவரும், கோவை மாநகரக் காவல் ஆணையருமான (பொறுப்பு) ஆா்.வி.ரம்யா பாரதி பாராட்டி வாழ்த்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




