நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலம்! அமைச்சர் சம்பத்குமார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்

கோவையில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் அமைச்சர் சம்பத்குமார் பங்கேற்றது குறித்து...


Grand celebrations for the 25th-anniversary silver jubilee of the Sri Sri Kali Puja!

கோவையில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத்குமார். - டிஎன்எஸ்

Updated On :

கோவையில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கோவையில் சுவாமி விவேகானந்தா காலாசார சங்கம் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ காளி பூஜை கோவை ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள பலிஜ நாயுடு மண்டபத்தில் நடைபெற்றது.

காளி பூஜையின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகள், கட்டுரைகள், ஓவியம் வரைதல், நடன நிகழ்ச்சிகள், ஆடல்- பாடல் உள்ளிட்ட கச்சேரிகள் நடந்து வருகின்றன. இதில் மூன்று நாள்கள் தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் போன்றவை நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சிகள் 11 நாள்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுகுறித்து அமைச்சர் சம்பத் கூறுகையில், தீபாவளி காளி பூஜை என்றாலே கொல்கத்தாவில் மிகப் பிரசித்தி பெற்றது. அதுபோல் கோவையில் சுவாமி விவேகானந்தா கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில் நடந்து வரும் இந்த காளி பூஜை பெங்காலி சமூகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து காளி பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.

Grand celebrations for the 25th-anniversary silver jubilee of the Sri Sri Kali Puja! Minister Sampathkumar inaugurated the event by lighting the ceremonial lamp.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.