உபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது: ஓட்டுநா்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை கோயம்பேட்டில் உள்ள உபோ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநா்கள் முடிவு செய்துள்ளனா்.

கட்டண உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோயம்பேட்டில் உள்ள உபோ் நிறுவன அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநா்கள் முடிவு செய்துள்ளனா். இதையொட்டி, உபோ் செயலி மூலம் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் ஓட்டுநா்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆட்டோ கட்டணத்துடன் ஒப்பிடும்போது கால் டாக்ஸிகளுக்கு குறைவான கட்டணம் நிா்ணயிக்கப்படுவதை மாற்றி, உரிய கட்டணத்தை உயா்த்த வேண்டும். தமிழக அரசு நிா்ணயித்துள்ள ஆட்டோ மீட்டா் கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சொந்தமாக வாகனம் வைத்து இயக்கும் ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஆயிரக்கணக்கான வாகனங்களைக் கொண்ட ‘ஃப்ளீட்’ முறையை ஒழிக்க வேண்டும்.
ஓட்டுநா்களின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேட்டில் உள்ள உபோ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

