சிஜேபி தலைவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிப்பு!ஆசிய பாரா விளையாட்டு: 4 தங்கம் வென்று 4-வது இடத்தில் இந்தியா!தனியார் வங்கி பங்கு சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 876 புள்ளிகளுடனும், நிஃப்டி 22,900க்கு கீழே சரிவு!!டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 94.92 ஆக நிறைவு!சென்னை வெள்ளத்தடுப்பு அறிக்கையை தாமதமின்றி வெளியிடுக! - தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!உலக ஸ்கேட்டிங் போட்டி: பதக்கங்களை வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!ஆசிய பாரா விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நிஷாத் குமார்!மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஆசிய பாரா விளையாட்டு: புதிய சாதனையுடன் முதல் தங்கம் வென்ற இந்தியா!7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

கோவையில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்! - அதிகாரிகளிடம் அமைச்சர் சம்பத்குமார் வாக்குவாதம்!

கோவையில் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள் குறித்து...

Residences in Coimbatore are flooded due to heavy rains

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சம்பத்குமார். - டிஎன்எஸ்

Updated On :

கோவை: கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாலைகளில் நீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஒருநாள் கூட முறையாக வேலை நடப்பதில்லை… எங்கே தூர்வாரினீர்கள்? என நகாராட்சி அதிகாரிகளிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அதிருப்தி தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து மாநகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மாலையில் பரவலாக மழை பெய்தது.

கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவானந்த காலனி, சங்கனூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவு நீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதிகளைச் சீரமைத்து, தண்ணீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த மாநகராட்சி அதிகாரியிடம் மழைநீர் தேங்கியுள்ளதற்கான காரணம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அப்போது அதிகாரியிடம் அதிருப்தியில் பேசிய அமைச்சர், "நீங்கள் சரியாகச் செயல்படவில்லை. இங்கு பார்த்தால் எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. ஒருநாள் கூட முறையாக வேலை நடப்பதில்லை... எந்தெந்த இடங்களில் வேலை செய்தீர்கள்? நாளை அதை மக்களுடன் வந்து, நீங்கள் வேலை செய்த இடங்களைக் காட்டுங்கள்" என்று கூறினார்.

மேலும், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாரி பராமரித்திருந்தால், இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது எனக் கூறிய அமைச்சர், "சரியாகத் தூர்வாரி இருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது" என்று அதிகாரியிடம் அதிருப்தி தெரிவித்தார்.

கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் மழைநீர் வடிகால் பராமரிப்புப் பணிகள் குறித்து அமைச்சர் நேரடியாகக் கேள்வி எழுப்பியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வடிகால்களைச் சீரமைத்து மீண்டும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Residences in Coimbatore are flooded due to heavy rains! - Minister Sampath Kumar argues with officials!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.