வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சைக்கிள் கொள்முதல் விலை குறைப்புக்குப் பின்னணியில் ஊழலா? - மு. அப்பாவு கேள்வி

சைக்கிள் கொள்முதல் விலை குறைப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு மு. அப்பாவு கேள்வி எழுப்பியிருப்பது பற்றி...

APPAVU

அப்பாவு(கோப்புப்படம்)

Updated On :

சைக்கிள் கொள்முதல் விலை குறைப்புக்குப் பின்னணியில் ஊழல் தானே? என முன்னாள் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நேரு பிறந்த நவம்பர் 14 அன்று தமிழக அரசால் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கேக்கில் நேருவின் படம் இல்லாமல் விளம்பரத்திற்கு உங்கள் படம் போட்டு கொடுத்திருக்கிறீர்களே! நினைவிருக்கிறதா !

ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸடீக்கர் ஓட்டலாமா CM sir ?

தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு உங்கள் படம் போட்ட #கேக் முக்கியமல்ல உங்கள் கட்சிக்காரார்கள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விஜய் படமில்லாமல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த #நடவடிக்கை எடுப்பீர்களா CM sir ?

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் மாணவர் சைக்கிள் ஒன்றிற்கு ரூ7,235 மாணவி சைக்கிள் ஒன்றிற்கு ரூ 7,476 என்றும் கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு "நள்ளிரவு" கொள்முதல் உத்தரவு பிறப்பித்தது நினைவிருக்கிறதா CM sir ?

தற்போது கோட்டையில் அதிகாரிகளோடு அமர்ந்து அதே சைக்கிள் கொள்முதல் செய்ய ரூ5,130, ரூ5,260 என விலை குறைய காரணம் என்ன ? அன்று 115 கோடி ரூபாய் அதிக விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது #ஊழல் தானே ? ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தூய ஆட்சி முன் வருமா CM sir ? எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Was there corruption behind the reduction in bicycle procurement prices? – Former Speaker M. Appavu raises a question.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.