ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

விஜய் முதல்வராக திமுக கூட்டணிதான் காரணம்; கரூர் சம்பவத்திற்குப் பிறகு...! இபிஎஸ் கடும் விமர்சனம்

மின் கொள்முதல், விலைவாசி உயர்வு, குதிரை பேரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து...

Edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி - DIN

Updated On :

தமிழக அரசிற்கு அதிக கடன் இருக்கும்போது இவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலம் புறநகர் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.

"ஏற்கனவே தமிழக அரசிற்கு அதிக கடன் இருக்கும்போது இவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏற்கனவே கடந்த அரசு ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டதில் அதிக ஊழல் நடந்ததாக கூறி ரத்து செய்தபோது இப்பொழுது ஏன் இவ்வளவு விலைக்கு வாங்குகிறீர்கள்? அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்து இருந்தால் இவ்வளவு விமர்சனம் வந்திருக்காது.

எனவே, இவர்கள் செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிலே இவர்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்துள்ளனர். செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி தற்பொழுது ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு வாங்குகின்றனர்.

திட்டமிட்டு நான்கு மாத காலமாக மின்சார கொள்முதல் செய்யாமல் கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தி மக்கள் எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற சூழலை ஏற்படுத்தி தற்பொழுது அதை வைத்து 35 ரூபாய் விலை கொடுத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது. இது வெற்றி மெகா ஊழல் என்று கூறலாம்.

ஆந்திரத்தில் அக்டோபர் மாதம் 15 முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்தனர். எனவே, இதில் மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அடுத்து விலைவாசி உயர்வு ... ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் எட்டியுள்ளது. பருப்பு விலை, எண்ணெய் விலை, புளி விலை என அனைத்து உணவுப் பொருள்களும் விலை உயர்ந்துவிட்டது. காய்கறி விலையும் உயர்ந்து விட்டது. நடுத்தர மக்கள், ஏழை மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை குறைக்க அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், உணவுத் துறை அமைச்சர் வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்புவதாக கூறுகிறார். இது நிர்வாக திறமையற்ற அரசாங்கம் என்பதற்கு இதுவே உதாரணம்.

இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலம் என இரண்டையும் வைத்துதான் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று வர்ணித்தார்கள். ஆனால் அந்த கல்லாப்பெட்டி கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் - விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோரின் தயவால்தான் தற்போது அரசாங்கமே அமைந்துள்ளது.

தீயசக்தி திமுக என்று குறிப்பிட்ட அந்த கட்சி தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்து இன்று அந்த கட்சி ஆட்சியில் உள்ளது.

விஜய் முதல்வர் ஆவதற்கு காரணமே கல்லாப்பெட்டி கூட்டணி. அவர் குறிப்பிட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தான் விஜய் முதல்வராகியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக ஒன்று கூறுவது, அதன் பிறகு தற்போது அந்தர் பல்டி அடித்து பேசுகின்றனர்" என்று கூறி தேர்தல் நேரத்தில் விஜய் பேசிய காட்சிகளை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

"கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் 72 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கரூர் சம்பவத்துக்குப் பிறகு 15 நாள்கள் தவெக அலுவலகமே பூட்டப்பட்டது. கரூரில் இறந்தவர்களுக்கு கூட அஞ்சலி செலுத்தவில்லை. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் ஓடியவர் விஜய். தொண்டர்களுக்கு ஒன்று என்றால் அவரும் அவரது நிர்வாகிகளும் ஓடிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று வீரவசனம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் எங்களைப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இருந்து கிளை ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வருவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பதும் அதிமுகவில் ஒருவர் கிளைச் செயலாளராக இருப்பதும் ஒன்றுதான்

ஏன், அந்த கட்சியில் கிளை செயலாளர்களே இல்லையா? இங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்று பொறுப்பு கொடுக்கிறார்கள் என்றால் அங்கு யாருமே இல்லை என்றுதானே அர்த்தம்.

இதோடு அதிமுகவை எந்த கொம்பனாலும் ஆட்டி அசைக்க முடியாது. ஒரு சிலர் கட்சிக்கு எதிரான நடவடிக்கை ஈடுபட்டால் அது அதிமுகவை எந்த வகையிலும் பாதிக்காது" என்றார்.

இடைக்கு எதிரில் அதிமுகவின் தோல்வி குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி அவர் தனது கட்சியின் வரலாறு குறித்து சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்தார்.

Summary

Power procurement, rising prices, horse-trading: EPS levels sharp criticism against TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.