10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

அதிக விலைக்கு மின் கொள்முதல்: மின் கட்டணம் உயருமா? அருண்ராஜ் பதில்!

அதிக விலைக்கு மின்சார கொள்முதல் குறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறியது பற்றி...

arunraj

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :

மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு வாங்கினால் நீங்கள் கேட்கலாம் என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயராது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

தவெக ஆட்சியில் விலைவாசியில்தான் முதலிடம் உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தது குறித்த கருத்துக்கு,

"திமுக தலைவர் வேறு என்ன சொல்லுவார்? நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இப்போதுகூட 4,724 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறோம். எந்த லஞ்சம் இல்லாமல், சிபாரிசு இல்லாமல் பணி நியமனம் கொடுத்துள்ளோம். ஒரு நல்ல ஆட்சிக்கு இதுதான் சான்று" என்று கூறினார்.

மின்சாரம் கொள்முதல் குறித்து, "காற்றாலை மூலமாக மின்சாரம் வரவில்லை, மழை இல்லை, வெய்யில் காரணமாக மின் தேவை அதிகமாக இருக்கிறது. தேவைக்கேற்ப யார் மின்சார கொள்முதல் செய்தாலும் இதே நிலைதான்.

அண்டை மாநிலங்களில் முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டிருக்கலாம். மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு வாங்கினால் நீங்கள் கேட்கலாம். இதில் முறைகேடு இல்லை.

மின் கட்டணம் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களுக்குத் தேவையில்லை. இது தற்காலிக சூழ்நிலைதான். விரைவில் அது சரிசெய்யப்படும்" என்றார்.

மேலும், "குதிரை பேரம் என்ற விஷயமே எங்களுக்குத் தெரியாது. நாங்கள் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதிமுகவும் திமுகவும்தான் குதிரை பேரம் செய்தார்கள். அது பிடிக்காமல் உண்மையான அதிமுக தொண்டர்கள் மற்ற கட்சிக்கு வந்தால், அதை குதிரை பேரம் என்று சொல்வார்களா?" என்று கூறினார்.

Summary

Electricity tariffs will not increase: Arunraj explanation TN electricity deal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.