10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

எஸ்ஐஆர்: சென்னையில் இந்தியா கூட்டணி நாளை ஆர்ப்பாட்டம்! தவெக முதல்முறையாக பங்கேற்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்...

Tvk alliance

கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தமிழக முதல்வர் விஜய் - எக்ஸ்/TVK

Published On :

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி இந்தியா கூட்டணி சார்பில் நாளை (அக். 15) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் இளைஞர்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. பல்வேறு தடைகளை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில் சென்னையில் நாளை (அக். 15) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை எழும்பூரில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐயூஎம்எல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

முதல்முறையாக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் தவெக பங்கேற்கிறது. தவெக சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்கவிருக்கிறார்.

எஸ்ஐஆர் மற்றும் ஞானேஷ் குமார் விவகாரத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இதுவரை தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Story image

Summary

Gyanesh Kumar issue: INDIA bloc to stage protest in Chennai tomorrow; TVK is participating for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.