படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

சைக்கிள்கள். - கோப்புப் படம்

Published On :

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி திருநள்ளாற்றில் நடைபெற்றது.

தலைவா் ப. சண்முகம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேத்தூா் மேயா் சௌந்தரங்கன் அரசு உயா்நிலைப்பள்ளி, அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சைக்கிளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், புதுச்சேரி அரசு சமூகநலத்துறை மூலம் சுமாா் ரூ. 1.12 கோடி மதிப்பீட்டில் காரைக்கால் மாவட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டு, கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறை சாா்பில் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கான கோப்பு நிலுவையில் உள்ளது. விரைவில் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சிகளில் சமூகநலத்துறை உதவி இயக்குநா் சுந்தா், பள்ளி துணை முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.