சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!கொளத்தூர் அரசுப் பள்ளி உணவுக் கூடத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது! ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தது பற்றி..

ஜெயக்குமார்

Updated On :

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர்ப் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது,

தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தீபாவளி பண்டிகையின்போது கூட பல்வேறு கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், முதலமைச்சர் இதுகுறித்து உரிய கவனம் செலுத்தவில்லை. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காவல் நிலைய மரணங்கள், சிறை மரணங்கள் எனத் தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் குறைந்த விலையில் பொருள்களை வாங்க முடிந்த நிலையில், தற்போது அதிகப் பணம் கொடுத்தும் குறைந்த அளவிலான பொருள்களையே வாங்கக்கூடிய சூழல் நிலவுகிறது. பால் விலை, மின் கட்டணம் உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விஞ்ஞான முறையில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கட்டடங்கள் அப்படியே இருக்கும் நிலையில், உள்ளே இருக்கும் நகைகள் மட்டும் கொள்ளையடிக்கப்படுகின்றன. டாஸ்மாக் பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லும்போதும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதுரையில் ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. தமிழகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றுள்ளன என்பதை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், குற்றங்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையே தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் காவல் துறையையும் உள்ளடக்கிய உள்துறையைத் தனது பொறுப்பில் வைத்துள்ளார். எனவே, சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் நேரடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், கள்ளக்குறிச்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அம்மா அவர்கள் ஆட்சியில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தருவார்கள். தற்போது அம்மாவின் பெயரை மட்டும் பயன்படுத்தி வருகிறார்களே தவிர, அவர் நடத்திய ஆட்சியைப் போன்ற ஆட்சி நடைபெறவில்லை. அம்மாவின் நினைவு மண்டபமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

தொடர்ந்து அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான முடிவு எங்கள் கட்சி சார்பில் கொள்கை முடிவைப் பொறுத்தது. தமிழக வெற்றிக் கழகத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்து தங்களுக்கு இல்லை என்றும், பல ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.